TAMIL MOTIVATIONAL STORY

Tamil motivational story

    
       ஒரு மனிதன் மலை உச்சியிலிருந்து தவறி விழுந்தபோது, தற்செயலாக பாறையின் விளிம்பில் நீட்டி கொண்டு இருந்த ஒரு வேரை பற்றி கொள்கிறான். பிடித்தளர்த்தால் பாதாளம் போகும் அபாயம்! அவன் அதுவரை கடவுளை நம்பியதில்லை. அப்போது கடவுளை நினைத்து, "கடவுளே, உன்னை நான் முழுமையாக நம்புகிறேன். நீ என்னை காப்பாற்ற வேண்டும்." என்று வேண்டினான். 
            அப்போது வானில் இருந்து ஒரு குரல்! 

            கடவுள் : " நீ என்னை நம்பமாட்டாய்...""
            
            மனிதன் : கடவுளே! என்னை விட்டு விட்டதே. நான் உன்னை நம்புகிறேன் 

            கடவுள்  : எனக்கு நம்பிக்கை இல்லை 

            மனிதன் : கடவுளே! நீ என்னை காப்பாற்ற வேண்டும் 
    
            கடவுள் : சரி! நான் காப்பாற்றுகிறேன். முதலில் நீ பிடுத்து இருக்கும் அந்த வேரை விடு    

            மனிதன் : வேரை விட்டுவிட்டால் நான் கீழே விழுந்துவிடுனே.
                        
                        (அதன் பிறகு வானத்திலிருந்து குரல் கேட்கவில்லை.)
                                   

    நீதி : வாழ்க்கையிலும் இப்படித்தான். நம்பிக்கை உரியவர்களை நம்பித்தான் ஆக வேண்டும். யாரையும் நம்ம விட்டால் நம்மிடம் வரும் நல்ல வாய்ப்புகள் நழுவி விடும்.