APJ ABDUL KALAM UNKNOWN STORY TAMIL

APJ ABDUL KALAM

  • மேதகு டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்று ஜனாதிபதி மாளிகைக்கு வந்தார்.
  • வாசலில், ஒருவர் அவர் காலைத் தொட்டார்...உடனே திரு. கலாம் அவர்கள்,“எழுந்திரு....என்ன வேண்டும் உனக்கு” என்று கேட்டாராம்....அதற்கு அந்த பணியாள், “நான் இங்கே ஜனாதிபதியின் ஷூக்களைத் துடைத்து பாலிஷ் போடுபவன்....உங்கள் ஷூக்களைத் தாருங்கள்” என்று கேட்டாராம்.

உடனே, திரு.கலாம் அவர்கள்,
  • “You are dismissed…” இனி இங்கே உனக்கு வேலையில்லை” என்றாராம்.
அதற்கு அந்த பணியாள்,
  • "உங்களுக்கு வேலை வந்த உடனே, என்னை வேலையைவிட்டு நீக்கிவிட்டீர்களே” என்று வருத்தத்துடன் கூறினாராம்.
உடனே, திரு. கலாம் அவர்கள் சிரித்துவிட்டு,
  • "You are not dismissed but transferred”, இனி, நீ தோட்ட வேலை பார்.....என் ஷூக்களை கவனிக்க எனக்குத் தெரியும்” என்று கூறினாராம்.
அவர் பதவி, நிறைவு பெற்று, மாளிகையை விட்டு செல்லும்போது, அந்த தோட்டப் பணியாளரை அழைத்து,
  • "என் வேலை போய்விட்டது....ஆனால் நீ இன்னும் இங்கே வேலை செய்கிறாய்” என்று சிரித்துக் கொண்டே கூறி, பூவாளியைக் கொண்டுவரச் சொன்னாராம்.
  • அவர் கொண்டு செல்ல வைத்திருந்த இரண்டு பெட்டிகளையும் நீர் ஊற்றி கழுவச் சொன்னாராம்.. ஏன் என்று பணியாளர் கேட்டதற்கு,
  • இந்த மாளிகையின் தூசி கூட என்னோடு வர நான் விரும்பவில்லை என்று சொன்னாராம்.

தனக்காக வாழாத, தேசத்திற்காக வாழ்ந்த சிறந்த மாமனிதர் அவர்

            இது பலருக்கு தெரியாததால், Unknown Story ஆகவே இருக்கிறது.