ENGLISH SENTENCE TO TAMIL


         Sentece என்பது பொதுவாக தமிழில் வாக்கியம் என்போம். நாம் பொதுவாக பேசுவதற்காகவோ அல்லது எழுத்துவதற்கோ சொற்களை பயன்படுத்திக்கிறோம். பொதுவாக சொற்கள் பின்வருமாறு இடம்பெறும்.
  • The cat is on the table ( பூனை மேஜையின் மேல் உள்ளது )
  • I have two pens ( என்னிடம் இரண்டு பேனாக்கள் உள்ளன ) 
  • The lion is the king of the forest ( சிங்கம் காட்டுக்கு ராஜா )
  • Naveen is a boy ( நவீன் ஒரு பையன் )
     இவ்வாறு முழுமையான அர்த்தம்  பெற்ற வார்த்தைகள் அல்லது முடிவு பெற்ற வார்த்தைகளின் தொகுப்பு Sentence ( வாக்கியம் ) என்பர்
.
     A sentence is a collection of words or phrases that have a complete meaning.

TYPES OF SENTENCE

Types of sentence


  • Declarative Sentence  or Assertive Sentence ( செய்தி வாக்கியம் )
  • Interrogative Sentence ( வினா வாக்கியம் ) 
  • Imperative Sentence ( கட்டளை வாக்கியம் )
  • Exclamatory Sentence ( ஆச்சரியமூட்டும் வாக்கியம் )

1. DECLARATIVE OR ASSERTIVE SENTENCE

        ஒரு தகவலை அல்லது விஷயத்தை உறுதியாக கூறும் வாக்கியம் செய்தி வாக்கியம் என்றழைக்கப்படும்.

        A sentence that affirms information or subject is called a declarative or assertive sentence.

Statement Sentence

        Statement வாக்கியம் எப்போதும் எழுவாயுடன் ( Subject ) தொடங்கும். எழுவாயை ( Subject ) தொடர்ந்து வினைச்சொல் ( Verb ) வர வேண்டும். மற்ற வார்த்தைகள் அதன் பின் வரும். இறுதியில் ஒரு முற்று புள்ளி இருக்கும்.
   
      The statement sentence always starts with the Subject. The verb should follow the subject. Other words will follow. There will be an endpoint at the end.

E.g. : I get up at 4 o'clock in the morning.  [ I - Subject, Get up - Verb ]    
         நான் தினமும் காலையில் 4 மணிக்கு எழுந்திருக்கிறேன்.

Examples:
  1. I'm going to my School [ I - subject, am - Verb ]
  2. Mumbai is the biggest city in India [ Mumbai - Subject, Is- Verb ]
  3. Delhi is the capital of India [ Delhi - Subject, Is - Verb ]
  4.  Time is gold [Time - subject, Is - Verb ]

Negative Sentence

        Negative வாக்கியத்தில் Not பயன்படுத்தப்படுகிறது. இல்லை என்ற பொருளை இந்த வாக்கியம் தருகிறது. 
        This is also a statement that gives negative ideas. Not is used in the negative sentence. This sentence means no.

Examples:
    
        1. I don't know English.
           எனக்கு ஆங்கிலம் தெரியாது.
        2. He didn't play Well.
           அவன் நன்றாக விளையாடவில்லை.
        3. Don't Talk.
            பேசாதே.
        4. I have not seen America.
            நான் அமெரிக்காவை பார்த்தது இல்லை/

2. Interrogative Sentence 

        கேள்வி கேட்டுக்கும் வாக்கியம் வினா வாக்கியம் எனப்படும்.   

        The sentence in question is called an Interrogative sentence.   

The structure of the Interrogative Sentence:

        கேள்வி வாக்கியம் What, When, Where, Which, Whom, How, Why, and etc. இவைகளில் ஒன்றாக இருக்கும். அடுத்தபடியாக துணை வினைச்சொல் ( Auxiliary Verbs ) வர வேண்டும். அதன் பின்பு, எழுவாயுடன் முக்கிய (Subject)வினைச்சொல்லும் ( Main Verb ) வர வேண்டும், மற்ற வார்த்தைகள் பின் வரும். வாக்கியத்தின் இறுதியில் கேள்விகுறி இருக்கும். சில நேரங்களில் வார்த்தை இல்லாமல் துணை Verbஐ மட்டும் வைத்து கேள்வி தொடங்கும்.     
         
         Question sentence What, When, Where, Which, Whom, How, Why, and etc. Let’s start with one of these. Next comes the auxiliary verbs. After that, the main verb should come with the subject and the other words will follow. There will be a question mark at the end of the sentence. Sometimes the question starts with just the sub-verb without the word.   

E.g. : 1. How did you write your Exam? [ How - Interrogative Sentence, Did - Auxiliary Verb, You- subject, Write - Main verb, ?- Question Mark ] 
          2. Do you know Hindi? [  Do- Auxiliary Verb, You - subject, Know - Main Verb, ?- Question Mark ].

Examples:
    1. How much money do you have in your Pocket?
        உன்னுடைய பையில் எவ்வளவு பணம் உள்ளது.
    2. Whom do you love?
        நீ யாரை நேசிக்கிறாய்?
    3. What is your Job?
        உன்னோடியா வேலை என்ன?
    4. What is your name?
        உன் பெயர் என்ன?  
    5. What you want?
        உனக்கு என்ன வேண்டும்?

3. Imperative Sentence

       ஒரு கட்டளை அல்லது வேண்டுகோளை வெளிப்படுத்தும் வாக்கியம் கட்டளை வாக்கியம் எனப்படும்.

       A sentence that expresses a command or request is called an Imperative sentence. 

The structure of an Imperative Sentence:

          ஒரு கட்டளை வாக்கியம் வினைச்சொல்லில்(Verb) தொடங்கும்.  வாக்கியத்தில் எழுவாய்(Subject) வராது. கடைசியில் முற்றுப்புள்ளி இருக்கும்.           
          A command sentence begins with a verb. The subject does not appear in the sentence. There will be an end in the end. 
        
E.g. : Shut the door ( No subject )
           கதைவை மூடு.
           Come here. ( No subject )
           இங்கே வா.     
     
   வேண்டுகோள் வாக்கியம், 'please'  வார்த்தையுடன் தொடங்கும். அடுத்த முக்கிய வினைச்சொல் வரும். இறுதியில் முற்றுப்புள்ளி இருக்கும்.
    
    The request sentence begins with the word 'please'. Next comes the main verb. There will be an end in the endpoint.   

E.g. : Please help me. 
          எனக்கு உதவி செய்.  

Examples:
1. Please give me a pen
    தயவுசெய்து பேனை கொடு.     
2. Please, don't make a noise.
     தயவுசெய்து சத்தம் போடாதே.   
3. Please go away from here.
    தயவுசெய்து, இங்கிருந்து சென்று விடு.

4. Exclamatory Sentence 

      உணர்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய வாக்கியம் உணர்ச்சி வாக்கியம் எனப்படும்.

      A sentence that can express emotion is called an Exclamatory sentence.  
        

The Structure of the Exclamatory Sentence:

       ஒரு உணர்ச்சி வாக்கியம் ஆச்சரியப் பகுதிகளாகிய What is bad, How tall, Alas, Well done, Bravo போன்றவைகளில் தொடங்கும். எழுவாயுடன்(Subject), வினைச்சொல்லும்(Verb) வாக்கியத்தின் இறுதியில் வரும். அடுத்து ஆச்சரியக்குறி(!) இருக்கும்.

       An emotional sentence begins with surprising parts such as What is bad, How tall, Alas, Well done, Bravo. With the subject, the verb comes at the end of the sentence. Next will be the exclamation point (!).

E.g. : What a beautiful view it is!
          என்ன அழகான காட்சி இது!
            
Examples:
        1. How tall she is!
        2. How beautiful your handwriting is!
        3. Shit! I've forgotten to bring my passport.
        4. Hurrah! we have won the match
        5. Alas! We have missed our leader.