சேலத்தில் 2 மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க தடை:


               சேலத்தில் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தினால் 2 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க தடை விதிக்கபட்டு உள்ளது.
               சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள குறிஞ்சி மருத்துவமனையும், டாமிய போர்டு பகுதியில் உள்ள மணிபால் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

               குறிஞ்சி மருத்துவமனையும், மணிப்பால் மருத்துவமனையும் திடீரென ஆக்சிஜன் பற்றாக்குறை என வேற மருத்துவனைக்கு அழைத்து செல்வதாக புகார்கள் எழுந்தன. அதன் பேரில் சுகாதார துறை மேற்கொண்ட ஆய்வில் அங்கு ஆக்சிஜன் அளவை முறையாக கையாளவில்லை எனவும், கொரோனா விதிமுறைக்கு எதிராக செயல்பட்டு வந்தது என்பது கண்டிப்பிக்கப்பட்டது. 
                இதனால் 2 மருத்துவமனைகளுக்கும் தடை விதித்து புதிய நேயாளர்களை சேர்க்க  என்றும், ஏற்கனவே சிகிச்சை பெறுபவரை வெளியேற்ற கூடாது என்று கூறினார்.